சட்டசபை தேர்தலில் திமுகவுடன் கூட்டணியை தேமுதிக உறுதி செய்துள்ள நிலையில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், முதல்வர் ஸ்டாலினை சந்தித்துவிட்டு வெளியே வந்த நிலையில், அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
தேமுதிக யாருடன் கூட்டணி என்று தொடர்ந்து கேட்டீர்கள். அதற்கான விடை இன்று அறிவித்துவிடுகிறோம். திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளோம். நிர்வாகிகள், தொண்டர்கள் விருப்பத்தின் பேரில் இந்த கூட்டணி அமைத்துள்ளோம்.
விஜயகாந்த் இருந்தபோதே 2016-ம் ஆண்டு திமுகவுடன் கூட்டணி அமைய வேண்டியது. எங்களுக்கு எத்தனை தொகுதிகள், யார் வேட்பாளர்கள் என்பதை குழு அமைத்து முடிவு செய்வோம். அந்தக் குழு திமுக தலைமையுடன் பேச்சு வார்த்தை நடத்தும்.
முதல் முறையாக திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளோம். மகிழ்ச்சியுடன் இந்த முடிவை எடுத்தோம். 200-க்கும் அதிகமான தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெறும்.
ராஜ்ய சபா சீட் தேமுதிகவுக்கு வழங்கப்படுமா என்று நீங்கள் கேட்கிறீர்கள். அதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்து அறிவிப்பார். இன்று திமுகவுடன் கூட்டணி அமைந்துள்ளது. மற்றதை பிறகு பேசுவோம். இவ்வாறு அவர் பேசினார்.

