Skip to content

கௌரவ விரிவுரையாளர்களுக்குரூ. 5000 கூடுதல் ஊதியம்- அமைச்சர் அறிவிப்பு

கௌரவ விரிவுரையாளர்களுக்கு மாதம் 5000 ரூபாய் கூடுதலாக ஊதியம் வழங்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கோபி செழியன் அறிவிப்பு.

திருவிடைமருதூரில் புதிதாக திறக்கப்பட்ட அரசு கலை கல்லூரிக்கு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் மு கருணாநிதி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி என பெயர் மாற்றம் செய்த பலகையை அமைச்சர் கோவி. செழியன் இன்று பார்வையிட்டார்.

அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அதில்…

கௌரவ விரிவுரையாளர்களுக்கு மாதம் 5000 ரூபாய் கூடுதலாக வழங்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் திருவிடைமருதூரில் செய்தியாளர்களிடம் பேசும்போது தெரிவித்தார்.

கௌரவ விரிவுரையாளர்கள் ஊதிய உயர்வு வேண்டுமென போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில் தமிழக அரசு கௌரவ விரிவுரையாளர்கள் 9646 நபர்களுக்கு மாதம் 5000 ரூபாய் கூடுதலாக வழங்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்தார்.

திருவிடைமருதூரில் புதிதாக திறக்கப்பட்ட அரசினர் கலை கல்லூரிக்கு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் மு கருணாநிதி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்தார்.

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடைபெற்ற தேர்வு முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் 2700 உதவி பேராசிரியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் கோவி செழியன் தெரிவித்தார்

error: Content is protected !!