தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்தமான் நிக்கோபார் பகுதிகளுக்கான தேசிய மாணவர் படை என் சி சி புதிய தலைவராக கமடோர் நம்பியத் சுதீப் பொறுப்பேற்றுள்ளார். அதன் முன்னாள் தளபதியான கமாண்டர் ராகவ் கடற்படை மற்றும் (NCC) என்.சி.சி. இல் நீண்ட கால பணிக்குப் பிறகு இன்று ஓய்வு பெற்றார்.
சென்னையை தலைமையிடமாகக்கொண்ட என்.சி.சி. இயக்குநரகம் தமிழ்நாடு, புதுச்சேரி யூனியன் பிரதேசம் (காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் உட்பட) மற்றும் அந்தமான் – நிக்கோபார் தீவுகளை உள்ளடக்கியது.
இது இப்போது 6 குழு தலைமையகங்களையும், ராணுவம், கடற்படை மற்றும் விமானப் படை பிரிவுகள் உட்பட சுமார் 59 பிரிவுகளையும் கொண்டுள்ளது. பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் இதில் கேடட்களாக சேர்ந்துள்ளனர்.
குடியரசு தின நிகழ்ச்சிகள் மற்றும் என்.சி.சி. படைப்பிரிவுகளில் தேசிய அளவில் சிறந்து விளங்குவதற்காக இந்த இயக்குநரகம் புகழ்பெற்றது. தேசிய துப்பாக்கி சுடும் சாம்பியன்ஷிப் போட்டிகள், சாகச நடவடிக்கைகள், இளைஞர் பரிமாற்ற திட்டங்கள் மற்றும் பேரிடர் நிவாரணம் போன்றவற்றிலும் இது புகழ்மிக்கதாகும்.

