Skip to content

வௌ்ளி விலை ரூ.10,000 சரிவு..

தங்கம் விலை எப்போதும் உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மை, பலவீனமான டாலர் திப்பு மற்றும் உலகளாவிய பதட்டங்கள், போர் சூழல் காரணமாக மாற்றத்தைக் கண்டு வருகிறது. இதுபோன்ற சூழலில், ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கூட்டாக அதிரடியாக தாக்குதல் நடத்தியது.
அதன் எதிரொலியாக, நேற்று காலை தங்கம் விலை மீண்டும் அதிகரித்தது. அதாவது, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.225 உயர்ந்து ஒரு கிராம் ரூ.15,775-க்கும், சவரனுக்கு ரூ. 1,800 அதிகரித்து ரூ. 1,26,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேசமயம் வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 5-ம் கிலோவுக்கு ரூ. 5,000-ம் அதிகரித்துள்ளது.

ஈரான் – அமெரிக்கா போர் காரணமாக தங்கம் விலை கிடுகிடுவென உயரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இன்று சென்னையில் 22K தங்கத்தின் விலை குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ. 115 குறைந்து, ரூ.15,660க்கும், சவரனுக்கு ரூ. 920 குறைந்து ரூ. 1, 25, 280க்கும் விற்பனையாகிறது. இன்று விலை குறைந்திருந்தாலும், வரும் நாட்களில் அதிகரிக்கவே வாய்ப்பு இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக ஏற்ற இறக்கம் கண்டு வருகிறது வருகிறது. இந்நிலையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.920 கணிசமாக குறைந்துள்ளது. அதே போல அதே போல் இன்று வெள்ளி விலையும் குறைந்துள்ளது.. அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.10 குறைந்து ரூ.315க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோவுக்கு ரூ.10,000 உயர்ந்து ரூ.3.15 லட்சத்திற்கு விற்பனையாகிறது.

error: Content is protected !!