திமுக காங்கிரஸ் தொகுதி பங்கேட்டில் இழுபறி நீடித்துவரும் சூழலில் முன்னாள் நிதி அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான பா சிதம்பரம், செல்வப்பெருந்தகை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தனர். இதனைதொடர்ந்து செல்வப்பெருந்தகை பேட்டியில் கூறியதாவது.. திமுக காங்கிரஸ் இடையே பேச்சுவார்த்தை செல்கிறது.. இழுபறி இல்லை.
தொகுதி பங்கீடு தொடர்பாக திமுகவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. கூட்டணி விவகாரத்தில் திமுக கெடு எதுவும் விதிக்கவில்லை. திமுக காங்கிரஸ் , கூட்டணி உறுதியாக இருக்கிறது. இழுபறி இல்லை என்று இவ்வாறு தெரிவித்தார்.

