Skip to content

ஜெத்தா தமிழ்ச்சங்க நல்லிணக்க இப்தார் விழா

சமூக நல்லிணக்கத்தையும், சகோதரத்துவத்தையும், ஒற்றுமையையும் வலுப்படுத்தும் விதமாக
ஜெத்தா தமிழ்ச்சங்கத்தின் 27-ம் ஆண்டு சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி 06.03.2026 அன்று ஜெத்தா இம்பீரியம் கூட்ட அரங்கில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சி செல்வன் முஹம்மது ஷராப் அவர்களின் கிராத் ஓதுதலுடன் தொடங்கியது.

அதனைத் தொடர்ந்து ஜெத்தா தமிழ்ச்சங்கத்தின் சார்பாக பொறியாளர் காஜா மைதீன் அவர்கள் கலந்து கொண்ட அனைவரையும் அன்புடன் வரவேற்று வரவேற்புரை நிகழ்த்தினார்.

சிறப்பு பேச்சாளராக கலந்து கொண்ட மௌலவி முப்தி முகமது இப்ராஹிம் அவர்களை ஜெய்சங்கர் அவர்கள் அறிமுகம் செய்து வைத்தார். அவர்களை திரு மூர்த்தி அவர்கள் பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.

பின்னர் “ரமலானும் மக்கள் நலப்பணிகளும்” என்ற தலைப்பில் சிறப்பு உரையாற்றிய மௌலவி முப்தி முகமது இப்ராஹிம் அவர்கள், ரமலானின் ஆன்மீகப் பொருள், சமூக ஒற்றுமையின் அவசியம், மற்றும் ஜெத்தா தமிழ்ச்சங்கம் மேற்கொண்டு வரும் சமூகப் பணிகள், குறிப்பாக தமிழ் பயிற்சி மையத்தின் சிறப்பான செயல்பாடுகளையும் பாராட்டினார்

இம்பீரியம் கூட்ட அரங்கின் தலைமை நிர்வாக அதிகாரி திரு சாத் அன்வர் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், திரு முஹம்மது சிராஜ் அவர்களுக்கு திரு இரமனன் அவர்கள் பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.

இந்த நிகழ்வில் ஜெத்தா இந்திய பன்னாட்டு பள்ளியின் துணை முதல்வர் திருமதி ஃபரா மசூத் அவர்கள், தமிழ் துறை ஆசிரியை திருமதி பானு ஹமீத் அவர்கள், கணித துறை ஆசிரியர் திரு குரு அவர்கள், மற்றும் DPS பள்ளியின் ஆசிரியர் திரு கணேஷ் அவர்கள் உள்ளிட்ட ஆசிரியர் பெருமக்கள்
தமிழ் சமூகத்தை சேர்ந்த மருத்துவர்கள் திருமதி ரேவதி, திரு கமல்காந்தன், திருமதி கவிதா, திரு முஜீப் இரஹ்மான் ஆகியோரும், .
ஜெத்தா தமிழ்ச்சங்க தமிழ் பயிற்சி மைய கல்வித் திட்டக்குழு திருமதி ஜெயஶ்ரீ மூர்த்தி , ஒருங்கிணைப்பாளர் திருமதி சத்தியா தங்கம் உள்ளிட்ட ஆசிரிய பெருமக்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.
பல்வேறு சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

சமூக நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் போற்றும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை திரு செந்தில் ராஜா அவர்கள் சிறப்பாக தொகுத்து வழங்கினார்.

நன்றியுரை திரு பார்த்திபன் அவர்கள் வழங்கினார்.

கலந்து கொண்ட அனைவருக்கும் சிறப்பு இரவு உணவு சென்னை எக்ஸ்பிரஸ் உணவகத்தின் மூலம் ஏற்பாடு செய்து வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற பல்வேறு வகைகளில் உதவிகரம் நீட்டிய திரு சீனி அலி, திரு பயாஸ், திரு சிவா, திரு இராமனுஜம், திரு இஜாஸ் அஹமது, திரு அமான், திரு நூருல் அமீன், திரு அகமது பாஷா, திரு சமீர், திரு ஆதில், திரு ஜாவித் மற்றும் ஜெத்தா தமிழ்ச்சங்க நிர்வாக குழுவினரின் ஒருங்கிணைப்பில் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

error: Content is protected !!