ஈரானின் புதிய தலைவர் மொஜ்தபா காமேனி மற்றும் பிற உயர் அதிகாரிகள் குறித்து தகவல் அளிப்பவருக்கு ரூ.92 கோடி வெகுமதி வழங்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.
ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தாபா கமேனி மற்றும் ஈரான் ராணுவ பிரிவான இஸ்லாமிய புரட்சிகர காவல்படை அதிகாரிகளின் இருப்பிடத்தை பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு 10 மில்லியன் டாலர் (சுமார் 92.47 கோடி ரூபாய்) பரிசு வழங்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.
உச்ச தலைவர் மொஜ்தாபா கமேனி, துணை தலைமை அதிகாரி அலி அஸ்கர் ஹுஜாசி, மற்றும் பாதுகாப்புப் படைத் தலைவர் அலி லாரிஜானி ஆகியோரின் புகைப்படங்களை வெளியிட்ட அமெரிக்கா, உலகம் முழுவதும் பயங்கரவாத செயல்களை திட்டமிட்டு செயல்படுத்துவதாக கூறி இந்த வெகுமதியை அறிவித்துள்ளது.முன்னதாக கடந்த பிப்ரவரி 28 அன்று ஈரானின் தெஹ்ரான் நகரில் அமெரிக்க – இஸ்ரேல் குறிவைத்து நடத்திய தாக்குதலில் அப்போதைய உச்ச தலைவர் அயதுல்லா காமேனி கொல்லப்பட்டார். இவர் தற்போதைய தலைவர் மொஜ்தபாவின் தந்தை ஆவார்.
இதற்கிடையே ஈரான் மீது வரும் நாட்களில் மிகவும் கடுமையான ராணுவத் தாக்குதல்களை அமெரிக்கா நடத்தும் என்று அதிபர் டிரம்ப் நேற்று அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

