Skip to content

தமிழக சட்டமன்ற தேர்தல் பார்வையாளர்களாக 327 அதிகாரிகள் நியமனம்

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலை அமைதியாகவும், பிரச்சனைகள் இன்றி நடத்தி முடிக்கவும் தேர்தல் ஆணையம் அதிரடியாக 327 தேர்தல் பார்வையாளர்களை தமிழகத்திற்கு நியமனம் செய்துள்ளது.

தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் கடந்த 15ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி தமிழகத்துக்கு ஏப்ரல் 23ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. மே 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் வரும் 30ம் தேதி தொடங்க உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை 234 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் தான் தேர்தல் ஆணையம் சார்பில் தமிழகத்துக்கான தேர்தல் பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, பொது பார்வையாளர்களாக (General Observers) 136 பேர், காவல் பார்வையாளர்களாக (Police Observers) 40 பேர், செலவு பார்வையாளர்களாக (Expenditure Observers) 151 பேர் என மொத்தமாக 327 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!