Skip to content

அரியலூர்..100 % வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு பேரணி

அரியலூர் மாவட்டத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்த
விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்
மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி கொடியசைத்து துவக்கி வைத்து, விழிப்புணர்வு

ரங்கோலி கோலங்களை பார்வையிட்டு, 100 சதவீதம் வாக்களிப்போம் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை கையெழுத்திட்டு துவக்கி வைத்தார்.

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் -2026,

அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்போம் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி கொடியசைத்து துவக்கி வைத்து,

வாக்களிப்பதன் அவசியம் குறித்து மகளிர் சுய உதவிக்குழுக்களால் வரையப்பட்ட விழிப்புணர்வு ரங்கோலி கோலங்களை பார்வையிட்டு, பின்னர், அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்போம் “தேர்தல் பருவம் – தேசத்தின் பெருமிதம்” வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை கையெழுத்திட்டு துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஸ்வேஷ் பாலசுப்ரமணியம் சாஸ்திரி கலந்துகொண்டார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்களுக்கு தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களால் வரையப்பட்ட “தேர்தல் திருவிழா தமிழகத்தின் பெருவிழா” விழிப்புணர்வு ரங்கோலி கோலங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு, மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களிடம் இதேபோல் தங்கள் இல்லங்களிலும் மற்றும் அவர்கள் குடியிருக்கும் பகுதிகளிலும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும் என அறிவுறுத்தினார்.

அதனைத்தொடர்ந்து, சட்டமன்ற பொதுத்தேர்தலில் அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்போம் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். இப்பேரணியில் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, 100 சதவீதம் ஓட்டு இந்தியர்களின் பெருமை, ஜனநாயகத்தின் வலிமை உங்கள் ஒவ்வொருவரின் ஓட்டிலும் உள்ளது, 100 சதவீதம் அனைவரும் வாக்களிப்போம், மனதில் உறுதி வேண்டும் மனசாட்சிப்படி வாக்களிக்க வேண்டும், வாக்களிப்பதில் பெருமை கொள்வோம் இந்திய ஜனநாயகத்தில் பங்குபெறுவோம் உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும் முழக்கமிட்டும் சென்றனர். பின்னர், அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்போம் “தேர்தல் பருவம் – தேசத்தின் பெருமிதம்” வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி கையெழுத்திட்டு துவக்கி வைத்தார்.

இந்த விழிப்புணர்வு நிகழ்வுகளில் மாவட்ட வருவாய் அலுவலர் க.ரா.மல்லிகா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் முனைவர்.ஆ.ரா.சிவராமன், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வதார இயக்கம் திட்ட இயக்குநர் சு.தேன்ராஜ், அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் செல்வி.பிரேமி, தேர்தல் விழிப்புணர்வு அலுவலர் யோகஜோதி, இதர அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

error: Content is protected !!