Skip to content

வெற்றியை கொண்டாடும் மனநிலையில் நான் இல்லை….. இளங்கோவன்

  • by Authour

ஈரோடு கிழக்கு தொகுதி  வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. தொடர்ந்து அதிக வாக்குகள் பெற்று முன்னணியில் உள்ள  காங்கிரஸ் வேட்பாளர்  ஈவிகேஎஸ் இளங்கோவன் நிருபர்களிடம் கூறியதாவது:

முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை 80 சதவீதம் நிறைவேற்றியுள்ளார். அதன் எதிரொலியாக இந்த வெற்றியை காண முடிகிறது. ஈரோட்டில் சில பணிகளை நிறைவேற்ற வேண்டியுள்ளது. எனது மகன் விட்டுச்சென்ற பணிகள் மற்றும் இதர பணிகளை அமைச்சர் முத்துசாமியுடன் சேர்ந்து முதல் அமைச்சரை சந்தித்து ஈரோடு மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற பாடுபடுவேன். நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தவரையில் தமிழகத்தில் திமுக தலைமையிலான மத சார்பற்ற கூட்டணி மிகப்பெரிய வெற்றிபெறும் என்பதற்கு இந்த தேர்தல் ஒரு எடுத்துக்காட்டு. இந்த வெற்றிக்கு திமுக அமைச்சர்கள், கனிமொழி, உதயநிதி, கமல் ஆகியோர் முக்கிய பங்கு வகித்தனர். இந்த வெற்றியின் பெரும் பங்கு முதல் அமைச்சரையே சாரும். தேர்தல் சரியாக நடக்கவில்லை என சிலர் கூறுகின்றனர். தேர்தல் ஆணையம் சரியாக செயல்படுகிறது என்பதை அதிமுகவே கூறியுள்ளது. இந்த பெரிய வெற்றி தான் என்றாலும் கூட வெற்றியை கொண்டாடும் மன நிலையில் நான் இல்லை. மகன் விட்டுச்சென்ற பணியை செயல்படுத்தவே நான் உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!