Skip to content

கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்…

கன்னியாகுமரி மாவட்ட திமுக அலுவலகத்தில் மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சரும், முன்னாள் திமுக தலைவருமான கருணாநிதியின் உருவ சிலை நிறுவப்பட்டுள்ளது. 6.5 அடி உயர் பீடத்தில் 8 அடி உயர கருணாநிதியின் வெண்கல சிலை நிறுவப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நிகழ்ச்சியில், முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலையை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, கே.என்.நேரு, ராமச்சந்திரன், மனோ தங்கராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதேபோல் கன்னியாகுமரி மாவட்ட திமுக நிர்வாகிகள் பலரும் சிலை திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

mk stalin

முன்னதக நாகர்கோவிலில் புதிதாக கட்டப்பட்ட மாநகராட்சி அலுவலக கட்டடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். நாகர்கோவிலில் புதிதாக மாநகராட்சி அலுவலகம் கட்ட ரூ.11.65 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.  இதையடுத்து கலைவாணர் அரங்கம் இருந்த இடத்தில் அதை இடித்து அகற்றிவிட்டு புதிய மாநகராட்சி அலுவலகம் கட்டும் பணிகள் நடைபெற்று வந்தன. புதிய மாநகராட்சி அலுவலக கட்டுமான பணிகள் நிறைவடைந்து மக்கள் பயன்பாட்டிற்கு தயாராக உள்ளது. இந்த மாநகராட்சி அலுவலகம் 2 தளங்களுடன் பிரம்மிக்கும் வகையில்  கட்டப்பட்டுள்ளது. கூட்ட அரங்கம் லிப்ட் வசதி உட்பட அனைத்து அடிப்படை வசதிகளுடன் இந்த மாநகராட்சி அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில், கள ஆய்வில் முதல் அமைச்சர் திட்டத்தின் கீழ் இன்று நாகர்கோவிலுக்கு வந்தடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய மாநகராட்சி அலுவலக கட்டிடத்தை திறந்து வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!