நேற்று ஏப்ரல் 14 வெள்ளிக்கிழமை சூரியன் தனது உச்ச ராசியான மேஷ ராசிக்கு பெயர்ச்சி ஆனார். சித்திரை 1 தமிழ் புத்தாண்டு பிறந்திருக்கிறது. மகர ராசியில் சந்திரன் சஞ்சாரம் செய்யக்கூடிய அற்புத நாளில் மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்கும் இன்றைய ஜாதகம் என்ன சொல்கிறது என்று பாருங்கள்.
மேஷம்
மேஷ ராசியினருக்கு இன்று குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும். திருமண வாழ்வில் இனிமை நிலைத்திருக்கும், துணைவியின் பாசமும் ஒத்துழைப்பும் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் இன்று கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய நாள். மூத்த அதிகாரிகளின் அதிருப்தியை சந்திக்க நேரிடும். சமூகப் பணிகளில் உங்கள் ஆர்வம் அதிகரிக்கும்.
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
சிம்மம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கலவையான நாளாக இருக்கும். இந்த மாணவர்கள் தங்கள் படிப்பு குறித்து கவலையடைவார்கள். தேர்வுக்குத் தயாராவதில் சில தடைகள் இருக்கலாம். இன்று உடன்பிறந்தவர்களின் சில பிரச்சனைகளை பேசி தீர்க்கப்பட வேண்டியிருக்கும்.
இன்று குடும்பத் தேவைகளால் செலவுகள் கூடும். நீங்கள் எந்த வகையான கடன் வாங்குவதையும் தவிர்க்கவும். காதல் வாழ்க்கையில் சில சிரமங்களை சந்திக்க நேரிடலாம். பொறுமையுடனும் புரிந்துணர்வுடனும் செயல்படுங்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று சமூக வட்டம் அதிகரிக்கும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். இன்று குடும்பத்தில் சிறிய பிரச்சனைகள் தலைதூக்கக்கூடும். இதனால் நீங்கள் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும். இன்று, உங்கள் வியாபாரத்தில் திடீர் பண ஆதாயத்திற்கான வாய்ப்பு உள்ளது. வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ள விஷயங்களை மட்டும் செய்ய முயற்சி செய்யுங்கள்.
துலாம்
இன்று துலாம் ராசிக்காரர்களின் கவலைகள் தீர்ந்து நிம்மதிப் பெருமூச்சு விடுவார்கள். இன்று உங்கள் பெற்றோரின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய ந்நாள். மாணவர்களின் செயல்பாடு சிறப்பாக இருக்கும்.
தொழிலில் முன்னேற வாய்ப்பு கிடைக்கும். இன்று மனைவியுடன் சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்படலாம். கடன் கொடுப்பதும், வாங்குவதையும் தவிர்க்க வேண்டும்.
விருச்சிகம்
இன்று விருச்சிக ராசிக்காரர்களுக்கு உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த ஒத்துழைப்பும், நன்மையும் கிடைக்கும். ஒட்டுமொத்தமாக, இன்று உங்கள் வேலையில் சாதகமான நாள். உங்கள் வேலை சீராக நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கும் வெற்றி கிடைக்கும். உங்கள் வேலையில் பதவியும், நற்பெயரும் உயரும். உத்தியோகஸ்தர் மேலதிகாரிகளின் நல்லுறவைப் பெறுவீர்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இன்று எந்த விஷயம் செய்தாலும் கவனமாகவும், மிகவும் சுறுசுறுப்பாக செயல்பட வேண்டிய நாள்.. சோம்பேறித்தனம் ஆதிக்கம் செலுத்தி விடாமல், வேலையில் முழு கவனம் செலுத்தினால் மட்டுமே அது பலன் தரும். கூட்டுத் தொழிலில் ஏற்றம் நிறைந்த நாள். உங்கள் துணையை சந்தோஷப்படுத்த சில திட்டங்களைச் செயல் படுத்துவீர்கள். மாணவர்களுக்கு இன்று ஆசிரியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கலவையான நாளாக இருக்கும். இன்று சந்திரன் உங்கள் ராசியில் சஞ்சரிக்கிறார். நீங்கள் அவசரமாக பெரிய முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்க வேண்டிய நாள். எதிர்காலத்திற்கான செயல் திட்டத்தில் வேலை செய்ய ஆரம்பிக்கலாம். உங்கள் பணியிடத்தில் வேலைகளை சரியான நேரத்தில் முடிக்க முயலவும். மாலையில் நீங்கள் சோர்வாகவும் பலவீனமாகவும் உணரலாம்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்சாகமான நாளாக இருக்கும். அரசாங்க வேலைகளுடன் தொடர்புடையவர்களுக்கு இன்றைய நாள் அலைச்சல் நிறைந்த நாளாக இருக்கும். பணியிடத்தில் சில மாற்றம் ஏற்படலாம் அல்லது பொறுப்பு மாறலாம். காதல் வாழ்க்கையில் அன்பும் ஒத்துழைப்பும் இருக்கும். மாணவர்கள் இன்று புதிய விஷயங்களைக் கற்க வாய்ப்பு கிடைக்கும். வேலையில் வெற்றி கிடைக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். மாணவர்கள் இன்று கல்வி, விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெறலாம். பணியிடத்தில் நண்பர்களாக இருந்தாலும், எதிரிகளாக இருந்தாலும் அவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். இன்று ஒரு பெண் நண்பரின் ஆதரவு கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் அன்பும் ஒற்றுமையும் இருக்கும். சுப காரியங்களுக்கு பணம் செலவழிக்க நேரிடும்.