Skip to content

சிஎஸ்கே மேட்ச்சை குடும்பத்துடன் கண்டு ரசித்த முதல்வர் ஸ்டாலின் …. படங்கள்…

  • by Authour

சென்னை மற்றும் ஐதராபாத் அணிகளுக்கு இடையே சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வரும் கிரிக்கெட் போட்டியை  நேற்று இரவு முதல்வர் ஸ்டாலின்  தனது குடும்பத்தினருடன் கண்டு ரசித்தார். முதல்வர் ஸ்டாலின் உடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலின், மகனும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி உள்ளிட்டோரும் போட்டியை கண்டு மகிழ்ந்தனர். சென்னை அணியின் மஞ்சள் வண்ண ஜெர்ஸியை அணிந்து ஸ்டாலின் சேப்பாக்கம் மைதானத்திற்கு வருகை புரிந்தார். முன்னதாக முதல்வரின் வருகையையொட்டி சேப்பாக்கம் மைதானத்தை சுற்றிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தன.

ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து ஐதராபாத் அணியின் பேட்ஸ்மேன்கள் களத்தில் இறங்கி விளையாடி வருகின்றனர். சென்னையுடன் ஒப்பிடும்போது ஐதராபாத் அணி பலவீனமாக காணப்படுவதால், இன்றைய ஆட்டத்தில் அதிக விக்கெட் அல்லது ரன்கள் வித்தியாசத்தில் சென்னை

அணி வெற்றி பெற்று, கூடுதல் நெட்ரன்ரேட்டை பெறும் என்று விமர்சகர்கள் கூறியுள்ளனர். தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 போட்டிகளில் 4 இல் வெற்றி பெற்று 8 புள்ளி மற்றும் +1.043 நெட் ரன் ரேட்டுடன் முதலிடத்திலும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 8 புள்ளி மற்றும +0.709 நெட் ரன்ரேட்டுடன் 2 ஆவது இடத்திலும் உள்ளன. இன்றை போட்டியில் அதிக ரன் அல்லது விக்கெட் வித்தியாசத்தில் சன் ரைசர்ஸை சென்னை அணி வென்றால் 2 அல்லது முதலிடத்திற்கு முன்னேறும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. சேப்பாக்கம் மைதானத்தை பொருத்தவரையில் இங்கு விளையாடிய 23 போட்டிகளில் சென்னை அணி 19-இல் வெற்றி பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!