கடந்த 2018-ஆம் ஆண்டு விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடிப்பில் வெளியான திரைப்படம் ‘96’. பள்ளிப்பருவ காதலை மையப்படுத்தி வெளியானதால் இப்படத்தின் கதையை பலரும் அவர்களது சொந்த வாழ்வுடன் தொடர்புப்படுத்திக் கொண்டனர். பிரேம்குமார் இயக்கத்தில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் கார்த்தியை வைத்து புதிய படம் ஒன்றை இயக்குனர் பிரேம்குமார் இயக்கவுள்ளார். கார்த்தியின் 27வது படமாக உருவாகும் இப்படத்தை 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த படத்தில் நடிகர் அரவிந்தசாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். அந்த கதாபாத்திரம் கார்த்தியின் ஹீரோயிசத்திற்கு நிகராக இருக்கும் என கூறப்படுகிறது. முதல்முறையாக கார்த்தியுடன் அரவிந்தசாமி நடிக்கவிருப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல ஒளிப்பதிவாளர் சத்யம் சூரியன் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றவுள்ளார். முதற்கட்ட பணிகள் நடைபெற்று வரும் இப்படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. தற்போது ராஜூ முருகன் இயக்கத்தில் உருவாகும் ‘ஜப்பான்’ படத்தில் நடிகர் கார்த்தி நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்து பிரேம்குமார் படத்தில் இணைவார் என்று கூறப்படுகிறது.

