நாகையில் 50,லட்சம் ரூபாய் மதிப்பில் இரு இடங்களில் நகர்ப்புற நலவாழ்வு மையம் திறப்பு.தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்த நிகழ்ச்சியில், திரளான மக்கள் பங்கேற்றனர். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நகர்ப்புற நலவாழ்வு மையம் நேற்று தமிழகத்தின் பல மாவட்டங்களில் திறந்து வைக்கப்பட்டது. இதனை தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக நேற்று திறந்து வைத்தார். இதைப்போல் நாகப்பட்டினத்தில் சாமந்தான்பேட்டை மற்றும் பழந்தெரு பகுதியில் மருத்துவம் மற்றும்
மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் 50,லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட இரு நகர்ப்புற நலவாழ்வு மைய கட்டடத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன், தாட்கோ தலைவர் மதிவாணன், மருத்துவர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர். புதிதாக திறக்கப்பட்ட நகர்புற நல வாழ்வு மையத்தில் நோயாளிகள் தங்களின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் பரிசோதித்து கொண்டனர்.