திருச்சி திருவெறும்பூர் அடுத்த முடுக்கு பட்டியை சேர்ந்தவர் வேல்முருகன்(30) கூலி தொழிலாளி இவருக்கு ராசாம்பட்டியை சேர்ந்த ராஜேஸ்வரி என்ற பெண்ணுடன் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்தது.
சில தினங்களுக்கு முன் ராஜேஸ்வரி, கணவனிடம் கோபித்துக்கொண்டு தாய் வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது.
அதனால் மனைவியைவீட்டுக்கு அழைத்து வருவதற்காக வேல்முருகன் தனது இருசக்கர வாகனத்தில் வாழவந்தான் கோட்டை ரெட் நகர் பகுதியில் நேற்று இரவு வந்த பொழுது தஞ்சை மாவட்டம் வெண்டயம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ராயமுண்டான்பட்டிக்கு வாழவந்தான் கோட்டை வழியே காரில் வந்த வெண்டயம் பட்டியை சேர்ந்த ஒருவர் மதுபோதையில் ஓட்டி வந்த கார் எதிரே வந்த வேல்முருகன் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது இதில் சம்பவ இடத்திலேயே வேல்முருகன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்நிலையில் சிவகுமார் காரை நிறுத்தாமல் ஓட்டி சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் பொதுமக்கள் ஒரு கிலோமீட்டர் தூரம் கடந்து காரை மறித்து பிடித்ததாகவும் அப்பொழுது சிவக்குமார் மது போதையில் இருந்ததும் தெரியவந்தது
இச்சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் உடனடியாக துவாக்குடி போலீசாருக்குதகவல் கொடுத்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற துவாக்குடி போலீசார் வேல்முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் மது போதையில் இருந்த சிவகுமாரை அவரது உறவினர்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்டதாக கூறப்படுகிறது.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது இது குறித்து துவாக்குடி போலீசார் விசாரித்து வருகின்றனர். போதையில் கார் ஒட்டிவந்த நபர், ஊராட்சித்தலைவரின் கணவர் எனக் கூறப்படுகிறது.
