திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே பணமங்கலத்தில் உள்ள திருச்சி சிதம்பரம் புறவழிச் சாலையில் மோட்டார் பைக்கில் வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக தடுப்புச் சுவரில் மோதிய விபத்தில் வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.உடன் வந்த நண்பர் படுகாயம் அடைந்தார்.
பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் பகுதியைச் சேர்ந்தவர் 26 வயதான வைத்தியநாதன். இவருடைய நண்பர் மண்ணச்சநல்லூர் ஸ்ரீதேவி மங்கலம் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன். இவர்கள் இருவரும் அரியலூரில் இருந்து மோட்டார் பைக்கில் திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது பணமங்கலம் திருச்சி சிதம்பரம் புறவழிச்சாலையில் வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராதமாக சாலையின் தடுப்புச் சுவரில் மோட்டார் பைக் மோதி விபத்துக்களானது. இதில் மோட்டார் பைக்கை ஓட்டி வந்த வைத்தியநாதன் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
பின்னால் அமர்ந்திருந்த மணிகண்டன் படுகாயம் அடைந்தார்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த வைத்தியநாதன் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் படுகாயம் அடைந்த மணிகண்டனை மீட்டு சிகிச்சையாக மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த விபத்து குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.