Skip to content

கரூரில் கவின்மிகு கரூர் என்ற திட்டம்… கலெக்டர் துவங்கி வைத்தார்…

கரூர் மாவட்டம், தாந்தோணி ஊராட்சி ஒன்றியம், வெள்ளியணை ஊரட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தேவேந்திரநகரில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் ஊரக வளர்ச்சி சார்பில் துய்மை பாரதம் இயக்கத்தின் கீழ் கவின்மிகு கரூர் திட்டத்தினை தொடங்கி வைத்தார்.

பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவிக்கையில்,
கரூர் மாவட்டத்தில் கவின்மிகு கரூர் என்ற திட்டத்தின் கீழ் கரூர் மாவட்டத்தில் உள்ள 157 ஊராட்சிகளும் குப்பை இல்லா, தூய்மையான சுகாதாரமான கிராமங்களாக இருக்க மாற்றும்

முயற்சியில் இந்தக் கவின்மிகு கரூர் திட்டம். கரூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை மூலமாக இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த திட்டமானது இன்று வெள்ளியணை ஊராட்சியில் முதல் கட்டமாக இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் திடக்கழிவு மேலாண்மை குப்பை சேகரிக்கும் ஒரு தொழில்நுட்ப ரீதியாகவும், மின்கல வாகனம் மூலம் குப்பைகள் சேகரிக்கபடும் அந்த வாகனத்தில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளது.

பொதுமக்களிடம் சேகரித்த குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பைகளாக சேகரித்து அதை சரியாக தரம் பிரித்து அதனை தனி இடத்தில் குழி அமைத்து குப்பைகளை அதில் சேகரித்து வைக்கும் பணிகளை மேற்கொண்டுள்ளோம். திடக்கழிவு அதாவது மக்காத குப்பை பிளாஸ்டிக் கழிவு பொருட்களை இயந்திரம் மூலம் அரைத்து சாலை பணிகளுக்கும் மற்றும் அதிலிருந்து சீருடைகள் தயாரித்து பயன்படுத்துவதற்கு முயற்சி செய்து வருகின்றோம்.
அதேபோல எங்கு எல்லாம் கழிப்பறைகள் பயன்படுத்தப்படுகிறது திறந்தவெளி மலம் கழிப்பதை தவிர்ப்பதற்கான நிலையினை ஏற்படுவதற்கு எங்கு எல்லாம் கழிப்பறை இல்லாத 200க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு புதிய கழிப்பறைகளும், கிட்டத்தட்ட 368 வீடுகளில் கழிப்பறை இருந்தும் பயன்பாட்டு இல்லாத நிலை உள்ளது. அதனை மாற்றி பொதுமக்கள் பயன்பாட்டில் கொண்டு வருவதற்கு முயற்சியும் எடுத்து வருகின்றோம். இது மட்டுமல்லாமல் பொது சுகாதார வளாகங்கள் ஒரு முன்னோடி வடிவங்களில் மக்கள் பயன்படுத்துவதற்கு பிடித்தமான ஒரு சூழலில் அவர்களிடம் கருத்துக்களை கேட்டு இந்த பொது சுகாதார வளாகங்கள் வெள்ளியணை ஊராட்சியில் கட்ட உள்ளோம்.

இதேபோன்று நமது மாவட்டம் முழுவதும் செயல்படுத்த உள்ளோம். இறுதி கட்டமாக திரவக்கழிவு மேலாண்மை சாக்கடைகளிருந்து கழிவுநீர்கள் வழியாமல் இருப்பதற்காக பல்வேறு விதமான உறுஞ்சு குழிகள், குழாய்கள் போன்றவை அமைக்கப்பட்டு அந்தத் திட்டங்களும் மேற்கொள்ளப்படும். இந்த ஒருங்கிணைந்த முயற்சியாக இதில் ஈடுபட்டு இருக்கக்கூடிய தூய்மை காவலர்கள் அவர்களை கௌரவிக்கப்படும் வகையிலும் அவர்களை உற்சாகப்படுத்தும் வகையிலும் ஒரு நபர்களுக்கு 3 சென்ட் இடம் வழங்கியும், அந்த நிலத்தில் வீடு கட்டுவதற்கான முயற்சிகளும் மேற்கொண்டு வருகின்றோம். அதேபோல தூய்மை பணியாளர்களுக்கு நல வாரியத்தில் அவர்களை இணைத்து அவர்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகளையும் பெற்றுக் கொடுக்க மேற்கொண்டு வருகிறோம்.
தொடர்ந்து இது மக்கள் இயக்கமாக இந்த கவின்மிகு கரூர் என்ற இயக்கத்தினை நாங்கள் கொண்டு செல்ல இருக்கின்றோம். ஊரக வளர்ச்சித்துறையை சார்ந்த அனைத்து அலுவலர்களும் மற்றும் ஊராட்சியின் மக்கள் பிரதிநிதிகளும் மற்றும் மக்களுடன் இணைந்து செயல்பட வேண்டும். இந்தத் திட்டத்தின் நோக்கமானது கரூர் மாவட்டத்தில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் குப்பைகளே இல்லாமல் அதேபோல 100% சுகாதாரமாக இருக்கும் வகையில் தொடரந்து இப்பணியை நீடித்திருக்கும் நிலையை ஏற்படுத்த அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் தெரிவித்தார்.

முன்னதாக தூய்மை பாரதம் இயக்கத்தின் கீழ் கவின்மிகு கரூர் திட்டத்தின் இலட்சினை வெளியிட்டு திட்டங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்து திட்டங்கள் குறித்த செயல் விளக்கத்தினை செய்தி மக்கள் தொடர்புத்துறை அதி நவின மின்னணு வாகனத்தில் ஒளிப்பரப்பட்டது.

பின்னர் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட மின்கல வாகனத்தின் சேவையை தொடங்கி வைத்து, குடியிருப்புவாசிகளின் வீடுகளுக்கு நேரடியாக சென்று மக்கும் குப்பை, மக்காத குப்பைகளாக தரம் பிரித்து தூய்மை பணியாளர்களுக்கு வழங்க பொது மக்களுக்கு அறிவூறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி குப்பை வண்டிகள் குறித்த நாளில் வரவில்லை என்றால் புகார் தெரிவிக்கும் வகையில் 9361494747 என்ற தொலைபேசி எண் கொண்ட ஒட்டு வில்லைகளை வீடுகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஒட்டினார்.

தொடர்ந்து தூய்மை காவலர்களுக்கு சீருடை, சேலை மற்றும் பாதுகாப்பு கவச உபகரணங்கள், முதற்கட்டமாக 20 தூய்மை காவலர் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களுக்கான ஆணைகளையும், வெள்ளியணை ஊராட்சியில் உள்ள 35 தூய்மை காவலர் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு தாட்கோ மூலமாக நலவாரியத்தில் இணைத்து அதற்கான தூய்மை பணியாளர் நல வாரிய உறுப்பினர் அடையாள அட்டையினை வழங்கியும், 50 நபர்களுக்கு தலா ரூ.12000 மதிப்பீட்டில் புதியதாக தனிநபர் இல்லக்கழிப்பறை கட்டுவதற்கான ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!