திருச்சி மாவட்டம், லால்குடியில் உள்ள அருள்மிகு சப்தரீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர தேரோட்ட விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. திருத்துவத்துறை என்னும் லால்குடியில் அமைந்துள்ளது. சப்தரீஸ்வரர் கோயில்.இக்கோயிலில்
ஏழு ரிஷிகள் தவமிருந்த இடமே திருத்தவத்துறை எனவும் ஏழு முனிவருக்கும் அருள் செய்ததால் பெருமானுக்கு சப்தரிஷீஸ்வரர் என்றும், இத்தலத்துக்கு சப்தரிஷீஸ்வரர் திருக்கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பூர தேரோட்ட விழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். பத்து நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் தினமும்
அம்பாளுக்கு சிறப்பு அமஷேகம் சுவாமி புறப்பாடு மற்றும் திருவீதி உலா நடைபெறும். இந்நிலையில் ஆடிப்பூர தேரோட்ட விழாவை முன்னிட்டு கடந்த 13 ந்தேதி அம்மனுக்கு காப்பு கட்டுதல் மற்றும் கொடியேற்ற விழா நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து தினமும் இரவில் அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். முக்கிய நிகழ்வான ஆடிப்பூர திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்வு இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் நித்தியா தலைமையில் கோயில் பணியாளர்கள் கோயில் குருக்கள்கள், பக்தர்கள் செய்து வந்தனர்.