மணிப்பூர் விவகாரம் பற்றி விவாதிக்க இந்தியா கூட்டணியின் எதிர்க்கட்சி எம்பிக்கள் மக்களவையில் ஆளுங்கட்சிக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தனர். இந்த தீர்மானத்தின் மீது கடந்த 3 நாட்களாக விவாதம் நடந்தது. ராகுல் காந்தி, அமித் ஷா, நிர்மலா சீதாராமன், கனிமொழி உள்ளிட்டோர் விவாதத்தின் மீது பேசினர். பிரதமர் மோடி இன்று பதில் அளித்து பேசினார். அவரது பேச்சு 2 மணி நேரத்துக்கு மேல் நீடித்தது. அவர் காங்கிரசை கடுமையாக சாடினார். அவர் பேசி முடித்ததும், குரல் வாக்கெடுப்பு நடந்தது. இதில் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. மோடி பேசிக்கொண்டிருந்த போதே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
