நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள வெள்ளப்பள்ளம் மீனவர் காலனியில் இருந்து நேற்று மதியம் மீன் பிடிக்க சென்ற மணியன்ஆறுமுகம் என்பவருக்கு சொந்தமான நாட்டுப் படகில் செல்வம், சத்யராஜ், ரமேஷ் நான்கு மீனவர்களும் இந்திய கடற்பரப்பில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர் அப்பொழுது அங்கே வந்து இலங்கை சேர்ந்த 3மீனவர்கள் தமிழக மீனவர்கள் படகில் ஏறி 250 கிலோவலை மீன்பிடி வலை 200 கிலோ மீன் உள்ளிட்டவைகளை பறித்துக் கொண்டு விரட்டியடித்துள்ளனர்.
கரை திரும்பிய மீனவர்கள்
வெள்ளபள்ளம் மீனவ பஞ்சாயத்தரிடம் தகவல் தெரிவித்ததன் பெயரில் கீழையூரில் உள்ள கடலோர காவல் குழும போலீசாரிடம் புகார் செய்துள்ளனர்.
இதுகுறித்து தமிழக மீனவர்கள் தெரிவிக்கையில் கடலில் மீன் பிடிக்க அச்சமாக உள்ளதாகவும் உடனடியாக தமிழக அரசு கவனத்தில் கொண்டு மீனவர்களை பாதுகாப்பாக கடலில் மீன் பிடிக்க உதவ வேண்டுமென மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.