Skip to content

ஐசிசியின் 20 ஓவர் கிரிக்கெட்….சிறந்த வீரர் சூர்யகுமார் யாதவ் பெயர் பரிந்துரை

ஐசிசியின் இந்த ஆண்டின் சிறந்த டி20 கிரிக்கெட் வீரருக்கான விருதுக்கு இந்திய வீரர் சூரியகுமார் யாதவ் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். 2022 ல் முன்மாதிரியாக இருந்த வீரர்களான சிக்கந்தர் ராசா, சாம் குர்ரான் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோருடன் பரிந்துரைக்கப்பட்ட ஒரே இந்திய வீரர் சூர்யகுமார் மட்டுமே. சூர்யகுமார் யாதவ், 2022 ம் ஆண்டு ஆட்டத்தின் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஒரே வருடத்தில் 1000 ரன்களுக்கு மேல் எடுத்த இரண்டாவது பேட்ஸ்மேன் ஆவார். அவர் 187.43 என்ற ஸ்டிரைக் ரேட்டில் 1164 ரன்களை எடுத்து, அதிக ரன் எடுத்தவராக இந்த ஆண்டை முடித்தார். 20 ஓவர் போட்டிகளில் ஒரே ஆண்டில் 68 சிக்ஸர்கள் அடித்துள்ளார். இந்த ஆண்டில் இரு சதங்கள் மற்றும் ஒன்பது அரை சதங்களுடன், யாதவ் சிறந்த 20 ஓவர் பேட்ஸ்மேனாக திகழ்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!