ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதியில் ஏராளமான மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு வசிக்கும் பொதுமக்கள் மகப்பேறு, நோயால் அவதிப்படுவோர் மருத்துவமனை செல்ல ஆம்புலன்ஸ் வசதி இல்லாத நிலை இருந்தது.. தொடர்ந்து அப்பகுதி வசிக்கும் மலைவாழ் மக்கள் ஆம்புலன்ஸ் வேண்டி கோரிக்கை விடுத்து வந்தனர். அதை ஏற்ற நகைச்சுவை நடிகர் பாலா 10 லட்ச ரூபாய் மதிப்பிலான 108


ஆம்புலன்ஸ் கடம்பூர் மலைப்பகுதி மக்களுக்கு வழங்கினார். ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஆம்புலன்ஸ் வழங்கும் விழாவில் நடிகர் பாலா ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் மற்றும் உணர்வுகள் அமைப்பின் தலைவர் மக்கள் ராஜன் உட்பட பலர் கொண்டனர். நீண்ட நாள் கோரிக்கை நடிகர் பாலாவின் மூலம் நிறைவேறிய நிலையில் நடிகருக்கு மலைவாசிகள் நன்றிகளை தெரிவித்தனர்.
