புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் சாம்பசிவம். இவரது சொந்த ஊர் மருதாந்தலை கிராமம் ஆகும். இவர் நேற்று இரவு முத்துடையான் பட்டி என்ற இடத்தில் ரோட்டை கடக்க முயன்றபோது வாகனம் ஒன்று மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்து வெள்ளலூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து சாம்பசிவம் உடலை கைப்பற்றி
Video Player
00:00
00:00
புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்தை ஏற்படுத்தியவர்க் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.