திருச்சி , துவாக்குடி உழவர் சந்தையின் செயல்பாடுகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, விளைப்பொருட்களை விற்பனை செய்யும் விவசாயிகளிடம், பொதுமக்களிடம் மாவட்ட கலெக்டர் மா.பிரதீப் குமார், இன்று கலந்துரையாடினார். இந்நிகழ்வில், துணை இயக்குநர் வேளாண் வணிகம் கு.சரவணன், துவாக்குடி
நகர்மன்றத் தலைவர் காயம்பு, நகராட்சி ஆணையர் பட்டுச்சாமி, நிர்வாக அலுவலர் நாகேஸ்வரி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.