திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த நல்லோர் வட்டம் மாநில வழிகாட்டி நவிலு சுப்பிரமணியன் பேசியது..
இந்தியாவே மேலும் வளர்ந்த நாடாக உருவாக்க வேண்டும் என்ற முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் அவர்கள் இறந்த தினமான அக்டோபர் 15ஆம் தேதி திருச்சி மாவட்டம் திருவரம்பூர் பகுதியில் தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களிலும் 100 துறைகளில் வளர்ச்சி அடைய தன்னலம் அற்று செயல்பட்டு வரும் 1000 இளைஞர்களை ஒன்றாக கூடி சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
மேலும் அப்துல் கலாம் அவர்களின் விஷன் 2020 மெய்ப்பிக்கும் வகையில் மக்கள் பொறுப்பு ஏற்று 100 துறைகளின் வளர்ச்சியை ஆண்டுதோறும் மதிப்பீடும் வகையில் அதே 2020 ஆம் ஆண்டு அக்டோபர் 15 முதல் ஆம் ஆண்டு என்று புதிய ஆண்டை உருவாக்கி வருகின்ற அக்டோபர் 15ம் தேதி 2023 கலாம் ஆண்டு 4 புத்தாண்டை நல்லோர் வட்டம் கொண்டாட இருக்கிறது.
கடந்த 23 ஆண்டுகளாக மாணவர்களை எதிர்கால தலைவர்களாக உருவாக்க மாணிக்க மாணவர்கள் திட்டம் அரசு பள்ளிகளை மேம்படுத்த கல்வி ,கோவில் விருது லட்சிய ஆசிரியர் விருது ஆகியவற்றை வழங்கி வருகிறது. மேலும் கிராமசபை விழிப்புணர்வு, கிராம வளர்ச்சி திட்டம் தயாரித்தல், ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு பயிற்சி அளித்து ஒருங்கிணைத்தல், அரசு நல திட்டங்களை மக்கள் அறிய செய்தல் போன்ற செயல்களும் தொடர்ந்து தமிழகம் முழுவதும் செயல்படுத்தி வருகிறோம். கல்லூரி மாணவர்களை சமுதாயப் பணிகளுக்கு ஈடுபடுத்துவது, இல்லத்தரசிகளுக்கு செம்மை இல்லம், வீட்டில் காய்கறிகள் மாடி தோட்டம் சுயதொழில் குப்பை மேலாண்மை மற்றும் நீர் மேலாண்மை போன்றவற்றிலும் செயல்பட்டு வருகிறது. இது போன்ற பல்வேறு நலத்திட்டங்களை நல்லோர் வட்டம் செய்து வருகிறது. குறிப்பாக அரசாங்கம் அரசியலுக்கு அப்பாற்பட்டு மூன்றாவது சக்தியாக மக்கள் சக்தியை நல்லோர் வட்டம் உருவாக்கி வருகிறது.
இந்த விழாவில் அக்னி ஸ்டீல் நிர்வாக இயக்குனர் தங்கவேலு, சென்னை சில்க்ஸ் மேலாண்மை இயக்குனர் விநாயகம், இந்திய மருத்துவ சங்கத்தின் முன்னாள் துணைத் தலைவர் டாக்டர் அஷ்ரப், அம்மன் ஸ்டில்ஸ் நிறுவன சோமசுந்தரம், ஹோட்டல் அஸ்வின் உரிமையாளர் கணேசன், ரோவர் கல்வி குழுமத்தில் தலைவர் வரதராஜன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொள்ள இருக்கிறார்கள். குறிப்பாக சிறப்பு விருந்தினராக பேராசிரியர் பழனிதுரை அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற உள்ளார்.