Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கீழ்பென்னாத்தூர் தமிழ்நாடு கிராம வங்கி கிளை புதிய கட்டிடத்திற்கு இட மாற்று விழா…

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் தமிழ்நாடு கிராம வங்கி கிளை புதிய கட்டிடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது. இதன் தொடக்க விழா நேற்று விமரிசையாக நடந்தது. விழாவிற்கு காஞ்சிபுரம் மண்டல மேலாளர் தங்கராஜன் தலைமை தாங்கினார்.

திருவண்ணாமலை கிளை மேலாளர் அசோக் வரவேற்றார். திருவண்ணாமலை சித்தார்த்தா கல்வி மற்றும் அறக்கட்டளை தலைவர் பாலமுருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைத்து பேசினார். மண்டல மேலாளர் தங்கராஜன் பேசுகையில், “தமிழ்நாடு கிராம வங்கி மற்ற வங்கிகளை காட்டிலும்

வாடிக்கையாளர்களுக்கு, விவசாயிகளுக்கு மற்றும் தொழில் முனைவோருக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்குகிறது.

3 வகையான காப்பீடு திட்டங்களையும் வங்கி செயல்படுத்தி வருகிறது. டெபாசிட்களுக்கு கூடுதல் வட்டி தருகிறது. வாடிக்கையாளர்கள் எங்கள் வங்கி சேவைகளை பயன்படுத்தி தங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்”.

விழாவில் ஆலம்பூண்டி கிளை மேலாளர் சிவசங்கரன், சேன் பள்ளி நிர்வாகி கனகவல்லி, சாஸ்த்ரா பள்ளி செயலாளர் சம்பத் குமார், வாடிக்கையாளர்கள் இயற்கை விவசாயி கிருஷ்ணன், செண்பகம், ஜெயக்குமார், விபுராஜ், கட்டிட உரிமையாளர் ராஜேந்திர பிரசாத் ஆகியோர் வாழ்த்தி பேசினர். கிளை மேலாளர் எஸ். சலோமி மேரி மேக்தலின் நன்றி தெரிவித்தார். வங்கி ஊழியர்கள் சதீஷ், சங்கீதா, சுபாஷ், புகழேந்தி, மகேஷ் குமார் ஆகியோர் விழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!