கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பரளியை சேர்ந்தவர்கள் சகோதரர்கள் நீலமேகம், மகேந்திரன். இவர்கள் இருவரும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை வீட்டினுள் பதுக்கி விற்பனை செய்து வந்துள்ளனர். இது குறித்து ரகசிய தகவல் அறிந்த தனிப்படை போலீசார் அங்கு சென்று சோதனையிட்டதில் அவர்களிடமிருந்து ஹான்ஸ் உள்ளிட்ட 10 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் இருவரையும் கைது செய்து குளித்தலை காவல் ஒப்படைத்தனர். குளித்தலை போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
வீட்டிற்குள் புகையிலைப் பொருட்களை பதுக்கிய 2 பேர் கைது…
- by Authour

