மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த காரைமேடு சித்தர்புரத்தில் ஒளிலாயம் சித்தர்பீடம் அமைந்துள்ளது. இங்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சீனா, ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து வந்து வழிபாடு நடத்தி செல்வது வழக்கம்.
இங்கு தைவான் நாட்டை சேர்ந்த யோங் ச்சென் என்ற ஆராய்ச்சியாளரும், ருச்சென் என்ற பெண் ஆசிரியரும் இந்து முறைப்படி நேற்று திருமணம் செய்து கொண்டனர். முன்னதாக இருவரும் காதலித்து வந்த நிலையில் இந்தியாவில் இந்து முறைப்படி திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று விரும்பியுள்ளனர். அதனை
தொடர்ந்து தமிழ்நாடு வந்த 2 பேரும் தமிழ் முறைப்படி திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஒளிலாய நிர்வாகிகள் நாடி செல்வமுத்துக்குமரன், நாடி செந்தமிழ் செல்வன் ஆகியோரிடம் தங்கள் விருப்பத்தை தெரிவித்துள்ளனர்.

தைவான் நாட்டை சேர்ந்த காதல் ஜோடிக்கு சீர்காழியில் இந்து முறைப்படி திருமணம் நடத்த சம்பவம் பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.