Skip to content

திருச்சியில் பார்வையற்ற மாற்றுதிறனாளிகள் பஸ்சை மறித்து ஆர்ப்பாட்டம்…

சென்னையில் போராடும் பார்வையற்றவர்களுக்கு ஆதரவாக திருச்சியில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் பேருந்தை மறித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை 1500 லிறுந்து 3000 உயர்த்தி தர வேண்டும், வழிபாட்டுத் தலங்கள் சுற்றுலாத்தலங்கள் பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் 10 சதவீதம் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்க வேண்டும்.

ஆசிரியர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட சிறப்பு தேர்வில் வெற்றி பெற்ற பார்வையற்றோர்களுக்கு நிரந்தர பணி வழங்க வேண்டும் மேலும் பார்வையற்றோரின் வாழ்வாதாரம், பணிவாய்ப்பு உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரி சங்கம் தொடர்

உண்ணாவிரத போராட்டம் மற்றும் சாலை மறியல் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாகவும் மேலும் ஒருவார காலமாக சென்னையில் ஆப்பாட்டமும், உண்ணாவிரத போராட்டமும் நடத்தி வரும் பார்வையற்ற மாற்றுதிறனாளிகளை முதல்வர் அழைத்து பேசி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என கோரி திருச்சி மாவட்ட பார்வையற்றோர் சங்கங்களில் கூட்டுக் குழு சார்பாக திருச்சி தெப்பகுளம் பஸ் ஸ்டாண்ட் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் ஈடுபட்டனர்.  இந்த ஆப்பாட்டத்தில் கலந்து கொண்ட பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் திருச்சி தெப்பக்குளம் பஸ் ஸ்டாண்ட் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் போலீசார் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!