இதுதொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கை… தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவர்களாக ஏ.கோபண்ணா, சொர்ண சேதுராமன் ஆகியோரும், கட்சியின் பொதுச் செயலாளர்களாக டி.செல்வம், கே.தணிகாசலம் மற்றும் என்.அருள் பெத்தய்யா ஆகியோரை நியமிக்கப்படுகிறார்கள். முன்னதாக, அகில இந்திய காங்கிரஸ் அழைப்பை ஏற்று தானும், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் எஸ். ராஜேஷ்குமாரும் உடனடியாக தலைநகர் டெல்லிக்கு செல்ல வேண்டியிருக்கிறது. எனவே, கருணாநிதி நினைவகத் திறப்பு விழாவில் பங்கேற்க இயலாத நிலை உள்ளதால், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர்கள் கே.வீ.தங்கபாலு, ஈ.வெ.கி.எஸ். இளங்கோவன், சு.திருநாவுக்கரசர், எம். கிருஷ்ணசாமி மற்றும் தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் சா. பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் பங்கெடுத்துக் கொள்வார்கள்.
