கோவை, பொள்ளாச்சி அருகே ஆழியாறு அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்தில், ஐந்து கால்வாய் வழியாக, 6,400 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன. இந்நிலையில் விவசாயிகள் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, தென்கரை பாலம் அருகே, 1.56 கோடி ரூபாய் செலவில் பாலம் கட்டுதல் காரப் பட்டி கால்வாய் 4.120 கி.மீ. உள்ள நீர் வழி பாலத்தில் சிறப்பு பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. கடந்த நான்கு மாதங்களுக்கு கட்டப்பட்ட பாலம், பக்கவாட்டு சுவர் மற்றும் கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்தது.
இதனால் விவசாயிகள் அதிருப்தி அடைந்தனர். விவசாயி பட்டீஸ்வரன் கூறுகையில், ” பாலம் கட்ட வேண்டும் என விவசாயிகள் சார்பில் மாவட்ட கலெக்டர், நீர்வளத்துறை அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்து நிதி பெறப்பட்டது.
ஆனால், பணிகள் இரவு மட்டுமே மேற்கொள்ளப்பட்டது. விவசாயிகள் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது.
பாலம் கட்டி நான்கு மாதத்தில் சேதமடைந்து இருப்பது வேதனையாக உள்ளது.
இது குறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ,” என்றார்