Skip to content

சாலையில் தடுமாறி விழுந்து உயிர் தப்பிய 10 வயது சிறுவன்… மயிலாடுதுறையில் பரபரப்பு..

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே உள்ள காளகஸ்திநாதபுரம்  கிராமத்தில் மயிலாடுதுறையில் இருந்து தரங்கம்பாடி செல்லும் பிரதான சாலையில் இன்று காலை 10 வயது சிறுவன் சாலையை கடக்கும் போது ஏற்பட்ட விபத்தில் நூலிழையில் தப்பிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. தரங்கம்பாடி தாலுகா காளகஸ்திநாதபுரம் கிராமத்தை சேர்ந்த பத்மநாபன் மகன் பிரணவ் என்ற 10 வயது சிறுவன் தனது சைக்கிளில் காற்று பிடிப்பதற்காக மயிலாடுதுறையில் இருந்து தரங்கம்பாடி செல்லும் பிரதான சாலையை கடக்கும் போது செம்பனார்கோவில் பகுதியில் இருந்து தரங்கம்பாடி நோக்கி அதிவேகமாக சென்ற இரு சக்கர வாகனத்தால் நிலை

தடுமாறிய சிறுவன் பிரணவ் சாலையின் நடுவே தனது சைக்கிளுடன் கீழே விழுந்தார். அதிக கனரக வாகனங்கள் செல்லும் சாலையில் சிறுவன் கீழே விழுந்த நேரத்தில் வாகனங்கள் செல்லாததால் பேருந்துக்காக காத்திருந்த பயணிகள் பொதுமக்கள் அந்த சிறுவனை பத்திரமாக மீட்டனர். இதனால் எந்தவொரு அசம்பாவிதமும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது. சிறுவன் நூலிழையில் தப்பிய சிசிடிவி காட்சி சமூக வளைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும் இது போல் அப்பகுதியில் அதிக விபத்துக்கள் நடப்பதாகவும் அங்கு வேகத்தடை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

error: Content is protected !!