கரூர் மாவட்டம், கிருஷ்ணாபுரம் சின்னைய ம பாளையம் ,ஆலமரத்துபட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ்,கடந்த 50 நாட்களுக்கு முன்பு இவரது மனைவிக்கு அழகான ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு மதுஷா என பெயரிட்டு இருந்தனர். இந்நிலையில் மதுஷா பிறந்து 40 நாட்கள் கடந்த நிலையில் அவருக்கு கரூர் மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போடப்பட்டது. பிறகு குழந்தை, மனைவியுடன் சுரேஷ் திருவரங்கம் சன்னதி தெருவில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு வந்து விட்டார்.
இந்நிலையில் நேற்று வீட்டில் குழந்தை மதுஷாவிற்கு திடீரென்று மூக்கிலிருந்து ரத்தம் வந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சுரேஷ் மற்றும் குடும்பத்தினர் உடனடியாக மது ஷாவை அழைத்து கொண்டு ஸ்ரீரங்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு குழந்தை மதுஷாவை பரிசோதனை செய்து பார்த்த டாக்டர் ஏற்கனவே மதுஷா இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.இந்த சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து மதுஷா எப்படி இறந்தார் என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

