வழக்கமாக ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம் துவங்கி தை மாத இறுதிவரை குளிர்காலம் என்பதால் அதிகாலை முதலே பனிப்பொழிவு இருக்கும். இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை சுற்றுலா தளமாக விளங்கி வருகிறது மேலும் ஏழைகளின் ஊட்டி எனவும் அழைக்கப்படுகிறது.
இதன் காரணமாக தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் ஏலகிரி மலையில் அதிகாலை முதலே சாரல் மழை

பொழிந்து கரு மேக மூட்டத்துடன் காணப்பட்டது.
மேலும் தற்பொழுது மாலை நேராமாகியும் கருமேகத்துடனும் கடுமையான பணிப் பொலிவுடன் ஏலகிரி மலை ரம்மியமாக காட்சியளிக்கிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றனர். மேலும் ஊட்டியில் இருக்கும் பருவநிலை போல் தற்போது ஏலகிரி மலையிலும் கடும் பனிப்பொழிவுடன் காணப்படுகிறது.
எனவே ஏலகிரி மலைக்கு வந்த சுற்றுலா பயணிகள் பனிப்பொழிவை வீடியோ எடுத்து மகிழ்ந்தனர். மேலும் அதையும் தாண்டி ஒரு சிலர் இருந்த குரங்குகளுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். மேலும்

மாலை நேரமாகியும் பனிப்பொழிவு விலகாமல் ஏலகிரி மலையில் ரம்மியமாக காட்சி அளித்தது குறிப்பிடத்தக்கது…

