சேலம் விஜய் கூட்டத்தில் உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய தவெக மாவட்ட செயலாளரிடம் பேட்டி எடுக்க முயன்ற நியூஸ் தமிழ் செய்தியாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய கூட்டத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்தும் மயக்கமடைந்தவர்கள் விவரங்கள் குறித்தும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது அங்கிருந்த கட்சி நிர்வாகிகள் செய்தியாளர்களை தாக்கம் முற்பட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் நியூஸ் தமிழ் செய்திக்குழுவின் வாகனம் மீது ஏறி நின்று சேதப்படுத்தி அராஜகத்தில் ஈடுப்பட்ட தவெகவினரால் பரபரப்பு ஏற்பட்டது. காருக்கு வழி விடுமாறு கூறி செய்தியாளரை சட்டையை பிடித்து தவெகவினர் அடிக்க பாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தவெக மாவட்ட செயலாளர் பார்த்திபனுடன் வந்த நிர்வாகிகள் அத்துமீறி தாக்குதல் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

