தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் நகராட்சி கீழத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் சுல்தான் அலாவுதீன் வயது 44. சுல்தான் அலாவுதீன் நேற்று காலை வெளியே சென்று விட்ட நிலையில் அவரது மனைவி பாத்திமா மற்றும் மகள் சமீரா ஆகியோர் டிவி பார்த்துக் கொண்டிருந்தனர் .அப்போது டிவி சரிவர தெரியாததால் இருவரும் டிவிக்கு பின்னால் சென்று பார்த்துள்ளனர். அங்கு வீட்டின் நிலைப்பகுதியில் இருந்த மின் இணைப்பில் இருந்து தீ எரிந்து வருவதை பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனடியாக இருவரும் வீட்டை விட்டு வெளியே வந்து அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்துள்ளனர். ஆனால் அவர்கள் வருவதற்குள் வீடு முழுவதும் தீப்பறவி வீட்டில் உள்ள கட்டில், பீரோ, வாஷிங் மெஷின், பிரிட்ஜ் ,ஏர் கூலர் மற்றும் துணிமணிகள் புத்தகங்கள் ஆதார் அட்டை உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் தீயில் எரிந்து சாம்பலானது. இது பற்றி சுல்தான் அலாவுதீன் கொடுத்த புகாரின் பேரில் அதிராம்பட்டினம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தீ விபத்தினால் ஏற்பட்ட மொத்த சேதம் மதிப்பு 1.5 லட்சம் என கூறப்படுகிறது.
அதிராம்பட்டினத்தில் மின்கசிவால் குடிசை வீடு எரிந்து சாம்பல்
- by Authour
