Skip to content

பா.ம.க.வில் நெருக்கடியான சூழல் உருவாகியுள்ளது… ஜி.கே. மணி

தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிர பணியில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், பாமக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து தொடர்ச்சியாக ஆலோசனை கூட்டத்தை நடத்தி வருகிறது. குறிப்பாக நேற்று திண்டிவனம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அதில் அன்புமணி கலந்துகொள்ளாததும் பல மாவட்ட தலைவர்கள் கலந்து கொள்ளாததும் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்தது. அதனை தொடர்ந்து இன்றும் விழுப்புரம், தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் பாமக இளைஞர் அணி, மாணவர் அணி, மகளிர் அணி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இன்றும் அன்புமணி கலந்துகொள்ளவில்லை. இதனால் பாமக உட்கட்சி விவகாரம் பேசுபொருளாகவும் மாறியுள்ளது.

இதனையடுத்து, கூட்டத்திற்கு வருகை தந்த கௌரவத் தலைவர் ஜி.கே. மணி கட்சிக்குள் சலசலப்புகள் சகஜம் தான் எனவும் பேசியிருக்கிறார். இது குறித்து பேசிய அவர் ” பா.ம.க.வில் நெருக்கடியான சூழல் உருவாகி உள்ளது என்பது உண்மை தான். கட்சிக்குள் சலசலப்பு வருவது இயல்புதான். இந்த விவகாரம் விரைவில் சரியாகும் என நான் நம்புகிறேன். ராமதாஸ், அன்புமணி இடையேயான பிரச்சினையை தீர்க்க இரவு பகலாக முயற்சிக்கிறேன். அவர்களின் இடையே கூட்டணி தொடர்பாக எந்த மோதலும் இல்லை.

உட்கட்சி பிரச்சனையை பொதுவெளியில் சொல்ல விரும்பவில்லை. ராமதாஸ், அன்புமணி இருவரும் விரைவில் சந்திப்பார்கள் என்ற நம்பிக்கையோடு இருக்கின்றோம். நான் ஒன்றை மட்டும் இந்த நேரத்தில் உறுதியாகச் சொல்கிறேன். தேர்தல் நெருங்குகிறதுக்கு முன்னாள் சந்தித்துப் பேசுவார்கள். நல்ல கூட்டணி அமைப்பார்கள்.

பா.ம.க. இடம்பெறும் கூட்டணி தான் தேர்தல் வெற்றி பெறும் என்கிற பழைய நிலைமையை மீண்டும் பாட்டாளி மக்கள் கட்சி உருவாக்கிக் காட்டும். இந்த மணியைப் பொறுத்தவரைக்கும் உண்மையாக இருப்பேன். மனசாட்சியோடு செயல்படுவேன். விரைவில் இந்த பிரச்சினை என்பது சரியாகும். ஊடகங்கள் இதை பெரிதுபடுத்த வேண்டாம்.” எனவும் ஜி.கே. மணி கேட்டுக்கொண்டுள்ளார்.

error: Content is protected !!