Skip to content

மது அருந்தும்போது நண்பர்களுக்குள் பிரச்னை- ஒருவர் கொலை.. புதுகையில் சம்பவம்

  • by Authour

புதுக்கோட்டை நகர டிவிஎஸ் கார்னர் அருகில் உள்ள மதுபான கடையில் நித்தியராஜ் என்பவர் மது அருந்தி கொண்டிருந்தார் . அப்போது அங்கு மது அருந்த வந்த காரைக்குடியில்உள்ள தனியார் மருத்துவமனையில் பார்மசிஷ்டாக பணியாற்றும் சரவணன் என்பவர் தனக்கு தரவேண்டிய 22,000 ரூபாய் திரும்ப கேட்டுள்ளார். அப்போது இருவர்களுக்கும் ஏற்பட்ட தகராறில் சரவணன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் இடது மார்பருகே குத்தியதில் மேற்படி நித்தியராஜ் காயம் ஏற்பட்டு புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனை கொண்டு சென்றனர். அப்போது அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.
இதுகுறித்து புதுக்கோட்டை டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!