கரூர் மாநகர் காவல் நிலையம் முன்பு மது போதையில் ஒருவர் தள்ளாடியபடி சத்தம் போட்டுக்கொண்டே வந்துள்ளார். இதனை பார்த்த அங்கிருந்து காவலர்கள் அமைதியாக செல்லுமாறு அறிவுரை கூறி அனுப்பியும், அதை கேட்காமல் காவல் நிலையத்திற்குள் உள்ளே சென்றுள்ளார்.
அப்போது காவல் நிலையத்தையே சுற்றி சுற்றி வந்த நாய் ஒன்று மது போதையில் இருந்த நபரை

பார்த்து குரைத்துள்ளது. கோபமடைந்த மது போதை ஆசாமி நாயைப் பார்த்து உன்னை கொன்று விடுவேன் என்று திட்டிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த காவலர் ஒருவர் அவரை வெளியே அழைத்துச் சென்றார். அப்போதும் விடாத நாய் அவரை பின்தொடர்ந்து குரைத்துக் கொண்டே வெளியே அனுப்பியது. அத

ன் பின்பும் அமைதியாக காவல் நிலைய வாசலில் நின்று கொண்டு அந்த நபர் போகு

ம் திசையை நோட்டமிட்டது பின்னர் அமைதியாக காவல் நிலையத்திற்குள் சென்று உள்ளே அமர்ந்து கொண்டது.
கரூர் காவல் நிலையத்தை பாதுகாக்கும் அதன் பெயர் டைகர் எனவும், புகார் மனு அளிக்க வரும்

பொதுமக்களை எந்த தொந்தரவும் செய்யாது எனவும், மது போதையில் யாராவது உள்ளே வந்தால், உள்ளே விடாமல் குரைத்து வெளியே அனுப்பிவிடும் என அங்கிருந்த காவலர்கள் கூறினர்.

