ராடோம் : போலந்தில் ராடோம் நகரில் நடைபெறவிருந்த 2025 ஆம் ஆண்டு எயர் ஷோவுக்கான பயிற்சியின் போது, போலிஷ் விமானப்படையின் F-16 போர் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் விமானி மேஜர் மேசி க்ராகோவியன் உயிரிழந்தார்.
விமானம் பயிற்சியின் போது கட்டுப்பாட்டை இழந்து ரன்வேயில் விழுந்து நொறுங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்து காரணமாக ஆகஸ்ட் 30-31 தேதிகளில் நடைபெறவிருந்த ராடோம் எயர் ஷோ ரத்து செய்யப்பட்டது.
விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது, மேலும் தொழில்நுட்பக் கோளாறு ஒரு சாத்தியமான காரணமாகக் கருதப்படுகிறது. இந்த சம்பவம் பற்றி உள்ளூர் ஊடகங்களும், பொலிஷ் இராணுவமும் உறுதிப்படுத்தியுள்ளன.
போலந்து இராணுவம் மற்றும் 8வது இராணுவ விவகாரங்களுக்கான மாவட்ட வழக்கறிஞர் அலுவலகம் ஆகியவை விபத்து குறித்து விசாரணையை தொடங்கியுள்ளன. விமானத்தின் ஃபிளைட் டேட்டா ரெக்கார்டர் (black box) மற்றும் பிற ஆதாரங்கள் ஆய்வு செய்யப்பட்டு, விரைவில் முழுமையான காரணங்கள் வெளியிடப்படலாம்.