மறைந்த காமெடி நடிகர் மயில் சாமி பல படங்களில் நடித்து பெரும் புகழ் பெற்றார் .இவரின் மகன் அன்பு மயில் சாமி தற்போது ஒரு படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார் .அந்த படம் பற்றி நாம் இப்பதிவில் காணலாம் . அன்பு மயில்சாமி, பிருந்தா, சாம்ஸ், சுவாமிநாதன், நிழல்கள் ரவி, மனோபாலா, ‘சித்தா’ தர்ஷன், சசி, ‘களவாணி’ தேவி, மாதேஷ், மீனா நடித்துள்ள படம், ‘தந்த்ரா’. எஸ் ஸ்கிரீன் தயாரித்துள்ளது. ஆக்ஷன் ரியாக்ஷன் சார்பில் படத்தை அடுத்த மாதம் ஜெ னீஷ் வெளியிடுகிறார். இயக்குனர் வேதமணி கூறுகையில், ‘இந்த உலகம் முழுவதும் முழுமையாக நல்லதாக மாற வாய்ப்பு இல்லை. அதே நேரத்தில், கெட்டது முழுமையாக ஆட்சி செய்யவும் வாய்ப்பு இல்லை. நல்லதும், கெட்டதும் நிறைந்திருப்பதுதான் உலகம். அதைப்பற்றி சொல்லும் கதை இது’ என்றார். சுஷ்மா சந்திரா தயாரிக்க, கணேஷ் சந்திரசேகரன் இசை அமைத்துள்ளார். ஹாபிஸ் எம்.இஸ்மாயில் ஒளிப்பதிவு செய்ய, மணிமொழியான் ராமதுரை அரங்கம் அமைத்துள்ளார். முகேஷ் ஜி.முரளி, எலிசா எடிட்டிங் செய்திருக்கின்றனர். சஞ்சனா நஜம் நடனக்காட்சி அமைத்துள்ளார். மோகன்ராஜன், சத்யசீலன் பாடல்கள் எழுதியுள்ளனர்.
மயில்சாமி மகன் ஹீரோவாக நடிக்கும் படம்…
- by Authour
