அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் கடை வீதியில் புகைப்படத்தில் உள்ள 3 வயதுமதிக்கதக்க ஆண் குழந்தை, 05.10.2025 அன்று ஆதவற்ற நிலையில் மீட்கப்பட்டுள்ளார். குழந்தை நலக்குழு ஆணையின்படி தற்போது குழந்தை பெரம்பலூர் மாவட்ட நல்ல ஆலோசனை மாதா சிறப்பு தத்து மைய நிறுவனத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட குழந்தை தொடர்பாக எவரேனும் உரிமை கோர விரும்பினால், உரிய ஆவணங்களுடன் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு, 2ஆம் தளம், அரசு பல்துறை வளாகம், அரியலூர் – 621704. தொலைபேசி எண் 04323 – 296239, மின்னஞ்சல் முகவரி dcpuariyalur2@gmail.com என்ற முகவரியில், இந்த அறிவிப்பு வெளியிடப்பட்ட 30 தினங்களுக்குள் அணுகுமாறும், குறிப்பிட்ட காலத்திற்குள் குழந்தை தொடர்பாக எவரும் உரிமை கோராத நிலையில் குழந்தை தத்தெடுப்புக்கு தகுதியான குழந்தையாக கருதப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது என அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
ஜெயங்கொண்டம் கடைவீதியில் ஆதரவற்ற 3வயது ஆண் குழந்தை மீட்பு
- by Authour
