திருநெல்வேலி மாவட்டம், விகேபுரத்தில் விளைநிலங்களில் புகுந்து யானை கூட்டம் நெற்பயிர்கள் சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சிறுத்தை, புலி, யானை, கரடி, மிளா உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இவை அவ்வப்போது குடியிருப்பு பகுதி மற்றும் விளைநிலங்களில் புகுந்து பயிர்களை சேதம் விளைவிப்பதும், வளர்ப்பு பிராணிகளை கடிப்பதும் தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அனவன்குடியிருப்பைச் சார்ந்த விவசாயி கல்யாணராமன் (57) என்பவரது விளைநிலங்களில் புகுந்து யானைகள் கூட்டமாக நெற்பயிர்களை சேதப்படுத்தியது.

