Skip to content

பொள்ளாச்சி அருகே பிறந்த குட்டியுடன் யானை கூட்டம் உலா… உற்சாகம்

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள ஆழியார் வால்பாறை போன்ற பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக மழைப்பொழிவு இல்லாமல் வறட்சி நிலவி வருகிறது இதனால் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனவிலங்குகள் அடிக்கடி பொதுமக்கள் பயணிக்க கூடிய சாலையில் உலா வருவது தொடர்கதையாக உள்ளது
இந்த நிலையில் இன்று மாலை ஆழியார் சம மட்ட கால்வாய் வால்பாறை சாலையின் ஓரத்தில் சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக மேய்ச்சலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த யானை கூட்டம் திடீரென ஆழியார் வால்பாறை சாலையில் அணைப்பகுதிக்கு தண்ணீர் குடிக்க பிறந்து ஐந்து நாட்கள் ஆன குட்டியுடன் நான்கு யானைகள் சென்றது இதனை காண வந்த சுற்றுலா பயணிகள் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து மகிழ்ந்தனர் இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில் கடும் வரட்சி நிலவுவதால் யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி பொதுமக்கள் பயணிக்க கூடிய சாலையில் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதால் இவ்வழியாக செல்லுபவர்கள் கவனமாக செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறது மேலும் யானைகளை கண்டால் புகைப்படம் எடுக்கக் கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

error: Content is protected !!