Skip to content

சாலை ஓரம் கிடந்த மனித எலும்புக்கூடு…. கடலூரில் பரபரப்பு

 

கடலூர் நகரின் பிரதான சாலையாக உள்ளது மஞ்சக்குப்பம் சாலை. இந்த மஞ்சக்குப்பம் சாலையில் இன்று காலை மனித எலும்பு கூடு கிடப்பதாக புதுநகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கடலூர் புதுநகர் காவல் துறையினர் அப் பகுதிக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அந்த பகுதியில் தலை எலும்பு மட்டும் இல்லை உடலில் உள்ள மற்ற பாகங்களின் அனைத்து எலும்புகளும் கிடந்தது கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து அந்த பகுதியிலேயே எலுமிச்சம் பழம் மற்றும் ஒரு சிறிய விநாயகர் சிலையும் வைக்கப்பட்டிருந்தால் மாந்திரீகம் என்ற பெயரில் இதுபோன்று செய்து யாராவது சாலையில் வீசி சென்று இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் அதனை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த பகுதியில் இருந்த அனைத்து எலும்பு கூடுகளும் தற்போது காவல்துறையினர் எடுத்துச் சென்ற நிலையும் இந்த எலும்புக்கூடு வீசி சென்றது யார் என்று போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு நெய்வேலி பகுதியில் இதே போல் ஒரு மனித எலும்புக்கூடு கிடந்த சூழ்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு சிதம்பரத்திலும் இதே போல் ஒரு எலும்புக்கூடு கிடந்து கண்டெடுக்கப்பட்டது. தொடர்ந்து இதே போல் மாந்திரிகம் செய்து சாலையில் வீசி செல்வது யார் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!