Skip to content

ஊருக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை…. கோவை அருகே வியந்த கிராம மக்கள்…

கோவை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக காட்டு யானைகள் உணவு தேடி ஊருக்குள் புகுந்து வீடுகளில் உள்ள உணவுப் பொருட்கள், விவசாயிகளின் நிலங்களில் உள்ள பயிர்கள், கால்நடைகளுக்கு வைத்திருந்த தீவனங்கள் போன்றவற்றை உண்டு சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் ஊருக்குள் சுற்றி தெரியும் ஒற்றைக் காட்டு யானை தாக்கி மனித – விலங்கு மோதல்கள் ஏற்பட்டு, படுகாயங்கள் அடைவதுடன், உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது. அந்தக் காட்டு யானைகளை வனத் துறையினர் விரட்டும் போது வனப் பகுதிக்குச் சென்ற காட்டு யானைகள் மீண்டும் திரும்பி அருகிலுள்ள கிராமப் பகுதிகளுக்குள் நுழைந்து விடுகிறது.

இந்நிலையில் நேற்று இரவு தொண்டாமுத்தூர் அருகே உள்ள அருகே உள்ள கொங்கு திருப்பதி கோவில், தேவராயபுரம் பகுதியில் நுழைந்த ஒற்றைக் காட்டு யானையை கண்ட பகுதி பொதுமக்கள் இது குறித்து வனத்துறை நறுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத் துறையினர் யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது அங்கு இருந்த பொதுமக்கள் ஏய் செமையா இருக்கு போ… என்று ஆச்சரியத்துடன் பார்த்தனர். அப்பொழுது அங்கு இருந்து சிலர் யானை வனத் துறையினர் விரட்டுவதை செல்போனில் வீடியோ பதிவு செய்தனர். அந்த செல்போன் காட்சிகள் தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது …..

error: Content is protected !!