Skip to content

வங்கக்கடலில் 12 மணி நேரத்தில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி..

  • by Authour
வங்கக்கடலில் 12 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடமேற்கு வங்கக்கடல் மற்றும அதனை ஒட்டிய வடக்கு ஒடிசா- மேற்கு வங்கம் கடலோர பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. மேலும் தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும்,  இன்று (ஜூன் 25)  கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.  அத்துடன் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 3 நாட்களுக்கு மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த தரைக்காற்று வீசக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், அங்கு  தொடர் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில்  வயநாடு , பாலக்காடு, மலப்புரம், இடுக்கி ஆகிய  நான்கு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கொல்லம், திருவனந்தபுரம் தவிற மற்ற அனைத்து மாவட்டங்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.  மேலும், வயநாடு, முண்டக்கை வட்டார மலைப்பகுதிகளில்  நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதா என ஆய்வு நடைபெறுகிறது.
error: Content is protected !!