பாச்சல் ஊராட்சி மன்ற அலுவலகத்தை பூட்டு போட்ட நபரால் பரபரப்பு! துப்புரவு பணியாளர்கள் அலுவலகம் வெளியே அமர்ந்து தர்ணா போராட்டம்!
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் ஊராட்சியின் ஊராட்சி மன்ற தலைவராக கவிதா திருப்பதி உள்ளார்.
இந்த நிலையில் சாந்தி நகர் பகுதியில் சேர்ந்த சம்பத் என்பவர் திடீரென ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உள்ளே புகுந்து துப்புரவு பணியாளர்களை வெளியே அனுப்பிவிட்டு ஊராட்சி மன்ற அலுவலகத்தை பூட்டு போட்டு எடுத்துச் சென்றார்.
இந்த நிலையில் பணி செய்ய முடியாமல் துப்புரவு பணியாளர்கள் அலுவலகத்தின் வெளிப்பட உள்ள கேட்டின் முன்பு அமர்ந்து தர்ணா ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் முதற்கட்ட விசாரணையில் சம்பத் வசிக்கும் பகுதியில் எந்த ஒரு அடிப்படை வசதி செய்யாத காரணத்தாலே ஆத்திரமடைந்த சம்பத் ஊராட்சி மன்ற அலுவலகத்தை பூட்டு போட்டு சென்றதாக கூறப்படுகிறது.
மேலும் ஒரு மணி நேரம் ஆகியும் ஊராட்சி மன்ற அலுவலகம் திறக்கப்படாததால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டு வருகிறது.

