பாமகவில் நிலவும் உள் மோதலுக்கு மத்தியில், கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று திண்டிவனத்தில் நிருபர்களிடம் தெளிவாக அறிவித்தார் “பாமகவின் தலைவர் நான்தான். மாம்பழம் சின்னம் எங்கள் கையில்தான் உள்ளது. தேர்தல் ஆணையமும் எங்களைத்தான் அங்கீகரித்துள்ளது. இது சட்டப்படி உறுதியானது.” நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தரப்பு தொடர்ந்த வழக்கு குறித்து கருத்து தெரிவித்த அவர், “அது தனிப்பட்ட விருப்பு வெறுப்பு சார்ந்த வழக்கு. கட்சியின் அதிகாரப்பூர்வ தலைமை என்னிடம்தான் உள்ளது” என்று உறுதிபட கூறினார்.
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பாமகவின் அடுத்த அரசியல் நகர்வு குறித்து பேசிய அன்புமணி, “இன்னும் ஒரு சில வாரங்களில் மெகா கூட்டணி அமையும். நமது நலன்களையும், தமிழகத்தின் ஒட்டுமொத்த முன்னேற்றத்தையும் மையப்படுத்திய பெரிய கூட்டணி உருவாகும்” என்று உற்சாகமாக அறிவித்தார். ஏற்கனவே அரசியல் வட்டாரத்தில் பாமக பாஜக, அதிமுக, தவெக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடப்பதாகவும், ஆனால் இறுதி முடிவு விரைவில் வெளியாகும் என்று தகவல்கள் பரவி கொண்டு இருந்தது.
இப்போது அன்புமணி இப்படி கூறியிருப்பது கூட்டணி குறித்த எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. தேர்தல் ஆணையம் கடந்த நவம்பர் 28 அன்று அன்புமணியை பாமகவின் அதிகாரப்பூர்வ தலைவராகவும், கட்சி அலுவலகம் தையாகராய நகரில் உள்ளது என்றும் அங்கீகரித்தது. இதை எதிர்த்து ராமதாஸ் தரப்பு டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தாலும், “சின்னம் முடக்கம் ஏற்பட்டால் மட்டுமே பிரச்சினை” என்ற நிலையில், அன்புமணி தரப்பு தற்ஒரு சில வாரங்களில் மெகா கூட்டணி அமையும்…அன்புமணி பேட்டி! போது முழு கட்டுப்பாட்டில் உள்ளது என்று கூறப்படுகிறது.
மேலும், ராமதாஸ் தனது மகன் அன்புமணி ராமதாஸுக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில், தேர்தல் ஆணையம் (ECI) கடும் நிலைப்பாட்டை அறிவித்துள்ளது. கட்சியில் இரு தரப்பு பிரச்சினை இருந்தால், படிவம் A மற்றும் படிவம் B-யில் இரு தரப்பு கையெழுத்துகளையும் ஆணையம் ஏற்காது. மாறாக, கட்சியின் மாம்பழம் சின்னத்தை முடக்கி வைக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

